
பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம்
முழு நீள நகைச்சுவை படமான இது, துமிலன் எழுதிய "புனர் ஜென்மம்" என்ற நாவலை தழுவியது. தங்கை மீது பாசம் கொண்ட அண்ணன் அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் "மணமகன் தேவை" விளம்பரம் செய்வார். ஆனால் இது பிடிக்காத தங்கை, அண்ணனை விட்டு விலகி விடுவார்.
விளம்பரத்தை பார்த்து வட நாட்டில் இருந்து கதையின் நாயகன் வருவார். பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி விடுவார். அண்ணனை விட்டு விலகிய தங்கை பின்னர் நாயகனை சந்திப்பார், அவர்தான் தன்னை பெண் பார்க்க வந்தவர் என்ற விபரம் தெரியாமலேயே காதலிப்பார். இருவரும் ஒரு விபத்தில் சிக்க அவர்களை காப்பாற்றும் ஒரு பணக்காரர் அவர்களை கணவன் மனைவி என்று கருதி அவர்களுக்கு உதவுவார். அவர்களும் வேறுவழி இல்லாததால் தங்களை கணவன் மனைவி என்றே கூறிக் கொள்வார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதே போன்ற கதை அமைப்புடன் பின்னாளில் பல கதைகள் வந்திருக்கிறது.
இந்த படத்தில் டி.டி.குசலகுமாரி, ஸ்ரீராம், கே.ஏ.தங்கவேலு, லட்சுமிகாந்த், "நண்பர்" ராமசாமி, கே.எஸ். அங்கமுத்து, டி.கே.ராமச்சந்திரன், கே.ஆர்.ஜெயகவுரி, ராஜா வஹாப் காஷ்மீரி, ரோஜா, ரங்கநாயகி, கணபதி பட், சம்பத்குமார், சங்கரமூர்த்தி, வேலப்பன், கணேஷ் சிங், வரதா பாய், ருக்மணி மற்றும் சி.பி. கிட்டன் ஆகியோர் நடித்திருந்தார்கள். சி.எஸ்.ராவ் இயக்கி இருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். படம் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!