
டியூட் படத்தை அடுத்து பைசன் வெற்றி விழா
"டியூட்" படத்தின் வெற்றியை சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து விழா கொண்டாடிவிட்டனர். அன்றுதான் படமும் 100 கோடி வசூலைக் கடந்தது. தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியான இப்படத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கும் சக்சஸ் மீட் வைத்தார்கள்.
"டியூட்" படத்தின் வெற்றிவிழாவை அடுத்து இன்று மதியம் "பைசன்" படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற உள்ளது. தெலுங்கில் இப்படம் நேற்றுதான் வெளியாகி உள்ளது. "பைசன்" வெற்றி மூலம் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். படத்தின் நாயகன் துருவ் விக்ரமிற்கு தனி நாயகனாக தமிழில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.
தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் இரண்டு வசூல் வெற்றி என்பது தமிழ் சினிமாவுக்குப் பெரும் ஆறுதல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!