
பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்…
அவர் கதாநாயகனாக அறிமுகமான "லவ் டுடே" படத்தில் மலையாள நாயகியாக இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டாவது படமான "டிராகன்" படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மூன்றாவது படமான "டியூட்" படத்தில் மமிதா பைஜு என அவர்களும் மலையாள கதாநாயகிகள்தான்.
தொடர்ந்து மலையாள கதாநாயகிகளுடன் ஜோடியாக நடித்து ஹாட்ரிக் 100 கோடி சாதனையைப் பெற்றுள்ளார். சினிமாவில் கதை, இயக்கம், இசை, நடிப்பு எனப் பேசினாலும் ராசி, சென்டிமென்ட் என்றும் பேசுவார்கள். அந்த விதத்தில் மலையாள ஹீரோயின்களின் ராசி, பிரதீப் ரங்கநாதனுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.
அவரது அடுத்த படமான "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தில் மங்களூருவைச் சொந்த ஊராகக் கொண்ட கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள கதாநாயகிகளின் ராசி போல மங்களூரு நாயகியின் ராசியும் பிரதீப்புக்குக் கை கொடுக்குமா என்பதை டிசம்பர் 18 வரை காத்திருந்து பார்க்க வேண்டும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!