
ஒரு ‛என் சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை
இதற்கிடையில் அவர் சகோதரர் மனைவியும் ஹன்சிகா மீது மும்பை போலீசில் கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜோசியம், கடவுள் நம்பிக்கை, பரிகாரத்தில் ஆர்வம் காண்பிப்பது பலரின் வழக்கம். அந்தவகையில் ஹன்சிகா மோத்வானி என்ற பெயரில், மோத்வானியில் நியூமராலஜிப்படி எக்ஸ்ட்ரா ஒரு ‛என்" ஐ சேர்த்து இருக்கிறார் ஹன்சிகா.
இதனால், தனது கஷ்டங்கள், பிரச்னைகள் மாறிவிடும் என அவர் நம்புகிறாராம். இதே ஹன்சிகா சில ஆண்டுகளுக்குமுன்பு ஹன்சிகா என்பது என் பெயர் மோத்வானி வேண்டாம் என்றார். பின்னர், மோத்வானியை சேர்த்துக் கொண்டார். மோத்வானி என்பது அவரின் தந்தை குடும்ப பெயர். அவர் முழுப்பெயர் பிரதீப் மோத்வானி. பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தந்தையும், தாயும் பிரிந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!