தெலுங்கில் 100 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1
அக் 22, 2025
Advertisement
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த "காந்தாரா சாப்டர் 1" படம் இதுவரையில் 800 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் முதன் முதலில் 200 கோடியைக் கடந்த படம் என்ற சாதனையைப் படைத்தது. அடுத்து தெலுங்கில் 100 கோடி வசூலைக் கடந்து மற்றுமொரு சாதனையைப் படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான டப்பிங் படங்களில் "கேஜிஎப் 2" படம் 100 கோடி வசூலைக் கடந்து, புதிய சாதனையை உருவாக்கியது. தற்போது "காந்தாரா சாப்டர் 1" படம் அதே சாதனையைப் புரிந்த இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தமிழகம், கேரளாவில் தலா 50 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளது. தென்னிந்தியா மாநிலங்களில் மட்டும் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது.
2025ல் இந்திய அளவில் 800 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ள "சாவா" ஹிந்திப் படத்தின் வசூலை "காந்தாரா 1" இன்றைய வசூலுடன் முறியடித்துவிடும் எனத் தெரிகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!