
இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா?
தமிழில் ருக்மணி வசந்த் அறிமுகமான படம் ஏஸ். விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்த அந்த படம் ஓடவில்லை. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. ஆனால், காந்தாரா சாப்டர்1 படத்தில அவர் நடித்த இளவரசி கேரக்டர் தமிழில் மட்டுமல்ல, இந்தியளவில் அவருக்கு தனி இடத்தை உருவாக்கி உள்ளது. 800கோடி வசூலை நெருங்கும் அந்த பட வெற்றியால், தென்னிந்தியாவில் முன்னணி படங்களில் நடிக்க, அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறதாம். இப்போதைக்கு ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்.
மலையாள படமான லோகா படத்தின் வெற்றியின் காரணமாக கல்யாணி பிரியதர்ஷனுக்கும், தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். இப்போது கார்த்தி ஜோடியாக அவர், ‛வா வாத்தியார்" படத்தில் நடித்து வருகிறார்.
டியூட் படத்தின் வெற்றி மமிதாவுக்கு தனி மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது. விஜயுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் கருப்பு, விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் படங்களில் நடித்து வரும் மமிதாவின் மார்க்கெட் மட்டுமல்ல, சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா ஆகியோர் இருக்கிறார்கள். கூலியில் மோனிகா பாடல், ரெட்ரோவில் கன்னிம்மா பாடல் வெற்றியால் பூஜாவுக்கு கமர்ஷியல் மார்க்கெட்டில் தனி இடம் இருக்கிறதாம்.
தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் பராசக்தி மூலமாக தமிழுக்கு வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!