
பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய மாங்கல்யம்
கே.சோமு இயக்கிய இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், ராஜா பிலிம்ஸ் சார்பில் வேம்பு தயாரித்திருந்தார். இந்த படம் முதலில் அறிவிக்கப்பட்டபோது பி.எஸ்.சரோஜா நாயகியாக அறிவிக்கப்பட்டிருந்தார். படம் தொடங்குவதற்கு சற்று தாமதமான சூழலில் அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ராஜசுலோச்சனாவை படத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினார் தயாரிப்பாளர் வேம்பு.
அதற்கேற்ப கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்ட சரோஜா தான் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினார். அதன் பின் திரையுலகினர் சமாதானப் பேச்சு நடத்தினர். தயாரிப்பாளர் படத்திற்காக நிறைய செலவு செய்து விட்டார். ராஜசுலோச்சனா நடித்தாலும் உங்கள் கேரக்டரில் மாற்றம் இருக்காது, உங்களுக்கான முக்கியத்தும் படத்தில் இருக்கும் என்று சரோஜாவை சமாதானப்படுத்தினர். படம் தயாரானதும், "இரு நாயகிகள் கலக்கும்" படம் என்று விளம்பரம் செய்தனர். படமும் வெற்றி பெற்றது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!