
கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் காந்தாரா சாப்டர் 1
கர்நாடகாவில் இதுவரையில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 2022ல் வெளியான "காந்தாரா படம் 185 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை தற்போது "காந்தாரா சாப்டர் 1" முறியடித்துள்ளது. அங்கு மட்டும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை எந்த ஒரு கன்னடப் படமும் 200 கோடி வசூலைப் பெற்றதில்லை. கன்னட சினிமாவின் 90 வருட வரலாற்றில் இதுதான் முதல் சாதனை.
"கேஜிஎப் 2" படத்திற்குப் பிறகு "காந்தாரா 1" படம் கன்னடத் திரையுலகத்தை இந்தியா முழுவதும் மீண்டும் பேச வைத்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!