
விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்…
இப்போது சுந்தர் சி, "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். விரைவில் அந்தப்படம் முடிந்துவிடும். அதற்குப் பிறகு விஷால் நடிக்கும் படத்தை ஆரம்பிக்க உள்ளாராம். படத்தின் அறிவிப்பை இப்போதைய டிரெண்ட் படி ஒரு முன்னோட்ட வீடியோவுடன் அறிவிக்க உள்ளதாகத் தகவல். அதற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது. இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக விஷால் தற்போது நடித்து வரும் "மகுடம்" படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம்.
விஷால் படத்தை முடித்த பின் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!