
எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல்
கண்ணதாசனின் நினைவு நாள் இன்று(அக்., 17) இதுதொடர்பாக நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், ‛‛அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும். எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள். என்றென்றும் உங்கள் நான்"" என குறிப்பிட்டு, அவருடன் இருந்த போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல், கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும் ‛கண்ணே கலைமானே..."" பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!