
‛அரசன் புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு
வட சென்னை இளைஞராக நடித்துள்ள சிம்பு, மூன்று கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். நான் கொலை செய்யவில்லை என நீதிபதியிடம் சிம்பு வாதிட மற்றொருபுறம் ஒருவரை கொலை செய்து விட்டு உடல் முழுக்க ரத்தம் படிந்த காட்சிகளுடன் அவர் இருக்கிறார். மேலும் இதனை படமாக எடுப்பதற்கு நெல்சன் வந்து சிம்புவிடம் கதை கேட்பது போன்று சில காட்சிகள் காமெடியாகவும் உள்ளன. அதோடு சிம்பு எனது ரோலில் தனுஷ் நடிக்கலாம் என கூறும் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன.
அரசன் படத்தின் மூலம் முதன்முறையாக சிம்பு, அனிருத் கூட்டணி அமைத்துள்ளனர். இதற்கிடையே சிம்பு வெளியிட்ட பதிவில், ‛‛அன்புள்ள அனிருத், இறுதியாக நமது கூட்டணியில் ஒரு படம். அரசன் புரொமோவை பயராக மாற்றிவிட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மற்றும் உங்கள் பிறந்தநாளுக்கும் வாழ்த்துகள்"" என குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!