
பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம்
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், துல்கர் சல்மான் கம்பெனியில் உதவி இயக்குனராக பணியாற்றும் தினில் பாபு என்பவர் தனக்கு துல்கர் சல்மான் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு பெற்று தருவதாக வரவழைத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயற்சித்தார் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானின் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் ஒன்று அளித்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் தினில் பாபு மீது தங்கள் பங்கிற்கும் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இது குறித்து துல்கர் சல்மான் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட இளம்பெண் குற்றம் சாட்டிய தினில் பாபு எங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை. தவிர எங்களது எந்த படங்களிலும் அவர் இதுவரை பணியாற்றியது இல்லை. எங்களது படங்களுக்கு தேவையான நட்சத்திர தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை எங்களது அதிகாரப்பூர்வமான சோசியல் மீடியா பக்கங்களில் தான் வெளியிடுகிறோம். இதுபோன்று போலியானவர்களின் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் மீது நாங்கள் புகார் அளித்தது கூட இனி இப்படி யாரும் இதுபோன்று மோசடி நபர்களின் ஏமாற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்” என்று கூறப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!