
விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத்
தற்போது ‛ஹாய்" பட இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் ஆக் ஷன், என்டர்டெய்னர் கதைக்களத்தில் உருவாகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக விக்ரம் நடித்த "மகான்" படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக முதலில் அறிவித்து, பின்னர் சந்தோஷ் நாராயணன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!