
35 நாளில் முடிந்த டூரிஸ்ட் பேமிலி அபிஷன் படம்
"டூரிஸ்ட் பேமிலி" பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகிவிட்டார். அந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். அனஸ்வரா ராஜன் ஹீரோயின். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல் வேகத்தில், 35 நாட்களில் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகி உள்ளது. “லவ்வர், டூரிஸ்ட் பேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!