
ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில்
கோமாளி படத்தில் எனக்கு இருந்த எனர்ஜி அவரிடம் இருந்தது. அவர் பெரிய இயக்குனர் ஆக வருவார். மமிதா பைஜூ குறும்படம், வேறு படங்கள் பார்த்து வியந்து இருக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. சாய் அபயங்கர் ஆல்பம் ஹிட்டானதால் அவரை புக் பண்ணினோம். இப்போது அவர் நிறைய படங்கள் இசையமைக்கிறார். எனக்கு பாடுகிற ஆர்வம் இருந்தது. இதில் ஒரு பாடலை என்னை பாட வைத்து இருக்கிறார்.
ரஜினி, கமல் இணையும் படம் உறுதி ஆகிவிட்டது. ஆனால் கதை, இயக்குனர் முடிவாகவில்லை என்கிறார்கள். என்னிடம் அந்த படத்துக்கு கதை இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பேன். அவர்கள் எவ்வளவு பெரிய ஸ்டார். அவர்களை இணைத்து படம் இயக்குவது சாதாரண விஷயமல்ல. நான் இப்போது நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகிறேன். தீபாவளிக்கு பல படங்கள் பார்த்து ரசித்து இருக்கிறேன். நான் நடித்த படம் இந்த ஆண்டு வருவது ரொம்ப மகிழ்ச்சி"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!