
கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை
இந்த நிலையில் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக வட மாநில பெண்கள் விரதம் இருந்து கடைபிடிக்கும் கர்வா சவுத் பூஜையை தனது இல்லத்தில் மேற்கொண்டார் காஜல் அகர்வால். இதற்கான ஆரம்பநாள் பூஜை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
அதோடு, ‛‛ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் சிறப்பானதாக மாற்றும் மக்களால் சூழப்பட்ட நாள். இதயம் நிறைந்தது, வயிறு நிறைந்தது, ஆன்மா நிறைந்தது. நம்மை வேரூன்றிய மரபுகளுக்கும், நம்மை வளர்க்கும் அன்புக்கும் நன்றி"" என குறிப்பிட்டுள்ளார் காஜல்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!