
சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ?
மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்களது நட்பில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல். அதற்கு முன்பாகவே, 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனி படத் தயாரிப்பில் ஈடுபடாது என்ற தகவலும் வெளிவந்தது. அந்நிறுவனம் தயாரித்து கடைசியாக வந்த "ரெட்ரோ" படமும் வியாபார ரீதியாக வசூலைப் பெறவில்லை. இதனிடையே, சூர்யா தரப்பில் "ழகரம்" என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். அது குறித்த செய்தியையும் நாம் இதற்கு முன்பே வெளியிட்டிருந்தோம்.
இனி, "ழகரம்" தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில்தான் சூர்யா படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு குறித்து தீபாவளி அன்றோ, தீபாவளிக்குப் பிறகோ வெளியாகலாம் என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!