
டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம்
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு போலீசாக நடிக்க, அவர் ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். மாஸ்டர் பட தயாரிப்பாளர் எஸ்.எஸ் லலித் குமார் மகன் எல்.கே அக்ஷய் குமார் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
ஒரு நீதிமன்ற பின்னணியில் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை, அழுத்தமாக வெளிப்படுத்தும்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இப்போது புதிய போஸ்டருடன் பட ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!