
பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி
ஆனால் இதே கருணாநிதி, "திரும்பிப்பார்" படத்தில் வாரிசு அரசியலை கிண்டல் செய்து அனல் பறக்கும் வசனங்களை எழுதினார். நேருவின் மகள் இந்திரா அரசியல் வாரிசாக வந்ததை மிக கடுமையாக இந்த படத்தில் விமர்சித்தார். இந்த படம் நேருவிற்கு போட்டுக் காட்டப்பட்டபோது "இது முட்டாள்தனமான செயல்" என்று குறிப்பிட்டாராம்.
பராசக்தி படத்திற்கு பிறகு சிவாஜி நெகட்டிவ் கேரக்டரில், அதுவும் பெண் பித்தனாக நடித்த படம் "திரும்பிப்பார்". சிவாஜியுடன் நரசிம்ம பாரதி, துரைராஜ், தங்வேலு, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!