
ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில்
ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து பிரதீப், “அப்படத்தை நான் இயக்கவில்லை. நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்துவதைத்தான் பார்க்கிறேன். இப்போது அது பற்றி அதிகம் பேச முடியாது,” என்று கூறியுள்ளார். அதனால், அவர் அந்தப் படத்தின் இயக்குனர் பட்டியலில் இல்லை.
மேலும், "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் வெளியான பின்பு, பிரதீப் அவரே இயக்கிய, நாயகனாக நடிக்கும் படத்தைத்தான் ஆரம்பிக்க உள்ளாராம். ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக அப்படம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதீப் நடித்துள்ள "டியூட்" அக்டோபர் 17ம் தேதியும், "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் டிசம்பர் 18ம் தேதியும் வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!