
என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம்
இதற்கு நன்றி தெரிவித்துள்ள அஜித் "தங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தங்களுக்குத் துணை நின்று வந்துள்ளது. உயரிய இலக்குகளை நோக்கி அஜித்குமார் ரேஸிங் அணி முழு முயற்சியுடன் பயணிக்கும். சென்னையில் கடந்த ஆண்டு "ஸ்ட்ரீட் ரேஸ்" கார் பந்தயத்தை தமிழக அரசு நடத்தியது. என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தது. அதுமட்டுமின்றி வேறு பல விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு உதவி வருகிறது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன். அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை. இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை எஸ்.டி.ஏ.டி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!