
பிரதீப்பின் ‛எல்ஐகே தள்ளிவைப்பு : டியூட் தயாரிப்பாளர் மீது எல்ஐகே தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
ஆனால், "டியூட்" படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. கடந்த சில நாட்களாக "டியூட்" படத்தின் புரமோஷன் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். தங்களது படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி என்றும் படக்குழுவினர் பேசி வந்தார்கள்.
இதனிடையே, "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தை டிசம்பர் 18க்குத் தள்ளி வைப்பதாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் சென்றால் பேராபத்து. டியூட் படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் "டியூட்" படத்தை ரிலீஸ் செய்யச்சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை. சினிமா நிலையை கருத்தில் கொண்டு எங்கள் அன்பின் அடையாளமாக எல்ஐகே படத்தை டிசம்பர் 18க்கு மாற்றுகிறோம்” என்று ரிலீஸ் தேதியை மாற்றி வைத்த தவகலையும் சொல்லி மைத்ரி நிறுவனம் மீது குற்றமும் சாட்டியுள்ளனர்.
இதற்கு மைத்ரி மூவிஸ் நிறுவனம் பதிலளிக்குமா அல்லது வழக்கம் போல கண்டும் காணாமல் போய்விடுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்று சக தயாரிப்பாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!