
காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த்
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛கிரஷ் என்று அழைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் அதைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. காரணம் அத்தகைய பாராட்டு தற்காலிகமானது என்று நம்புகிறேன். காலப் போக்கில் அது மாறிவிடுகிறது. ஆனால் நான் ஒரு விஷயத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பலர் இன்னும் என்னை பிரியா என்று அழைக்கிறார்கள். கன்னடத்தில், சப்தா சாகர தாட்சே எல்லோவில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அது. அந்த வேடத்தில் நடிக்கும் போது ரொம்பவே பயந்தேன். ஆனால் அந்த எளிமையான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கும் ருக்மணி வசந்த், எதிர்காலத்தில் காதல், நகைச்சுவை கலந்த கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்"" என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!