
‛பேராண்டி படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல்
அவர் கூறியது, "பேரன் பாட்டி உறவை சொல்லும் படம் பேராண்டி. பாட்டியாக நடிக்க ஆச்சி மனோரமாவை முன்பே அணுகினோம். ஆனால் உடல்நிலை காரணமாக அவர் நடிக்கவில்லை அவருக்கு பதில் நடிகை லதா நடித்தார் ஆனாலும் எங்களுக்காக பச்சை மலை காட்டுக்குள்ள பவளமலை ஓரத்திலே என்ற பாடலை மனோரமா பாடி கொடுத்தார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்தார்.
சென்னை ஸ்டூடியோ ஒன்றில் மனோரமா வந்து சின்சியராக பாடியது மறக்க முடியாத நிகழ்வு. அவரால் நடிக்க முடியாவிட்டாலும் அவர்தான் நடிகை லதாவை சிபாரிசு செய்தார். சினிமாவுக்காக மனோரமா பாடிய கடைசி பாடல் இதுதான். சூழ்நிலை காரணமாக இப்போதுதான் படத்தை வெளியிட உள்ளோம். கோபிசெட்டிபாளையம் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. ஆடு மேய்ப்பரளாக லதா வருகிறார். பேரனின் காதலுக்கு எப்படி உதவுகிறார் என கதை நகர்கிறது. நானே அந்த பாடலை எழுதியுள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மனோரமா பாடிய பாடலை கேட்பது புது அனுபவமாக இருக்கும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!