
நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம்
இதில் ரச்சிதா ராமின் பெயருக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கூலி படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டினார். அது மிகப்பெரிய விருது கிடைத்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதோடு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நான் நடிக்கிறேன். கூலி படத்திற்கு பிறகு நெகடிவ் கதாபாத்திரங்கள் அதிகமாக வருகிறது என்று கூறியிருக்கும் ரச்சிதா ராம், எனது பெற்றோர் தற்போது எனக்கு வரன் பார்த்து வருகிறார்கள். அதனால் கூடிய சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தனது பிறந்தநாள் செய்தியாக வெளியிட்டுள்ளார் ரச்சிதா ராம்.
முன்னதாக தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. இப்போது அவருக்கு போட்டியாக அதே டைட்டிலில் ரச்சிதா ராம் களமிறங்கி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!