
பாகுபலி எபிக் ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட பாகுபலி 1, 2
இந்நிலையில் இரண்டு பாகங்களையும் இணைத்து "பாகுபலி எபிக்" என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள். ஐமேக்ஸ், 4டிஎக்ஸ், டி பாக்ஸ், டால்பி சினிமா, எபிக்" ஆகிய திரை தொழில்நுட்பங்களில் படத்தைத் திரையிட உள்ளார்கள்.
"பாகுபலி எபிக்" படம் வெளியாக இருப்பதால் தற்போது ஓடிடி தளங்களில் இடம் பெற்றிருந்த "பாகுபலி 1, 2" ஆகிய படங்களை அதிலிருந்து தூக்கி உள்ளார்கள். "பாகுபலி எபிக்" படம் தியேட்டர்களில் ஓடி முடிந்த பிறகு அது மீண்டும் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, நெட்பிளிக்ஸ் தளத்திற்கான வருட உரிமை முடிந்திருக்கலாம், அதனால் நீக்கியிருப்பார்கள் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!