
பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2
பிரபுசாலமனும் ஒரு கட்டத்திற்குமேல் அந்த படத்தை மறந்துவிட்டு அடுத்த படங்களுக்கு சென்றுவிட்டார். இப்போது விஜயகுமார் பேரனும், வனிதா மகனுமான ஸ்ரீஹரியை வைத்து மாம்போ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். அது, சிங்கம் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துாசிதட்டி எடுத்து கும்கி 2 படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. ஹீரோவாக நடித்த மதி, இயக்குனர் லிங்குசாமியின் உறவினர். கும்கியை தயாரித்தது லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கும்கி 2வுக்கு இமான் இசையமைக்கவில்லை, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!