
டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு
பவன் கல்யாண் நடித்து கடந்த வாரம் வெளியான "ஓஜி" படத்திற்கு அப்படியான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தெலுங்கானா அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்தார்.
இதனிடையே, டிக்கெட் கட்டண உயர்வுக்காக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதனால், பழைய கட்டணத்தில் ரசிகர்கள் இனி அப்படத்தைப் பார்க்க முடியும். இன்று முதல் அது அமலுக்கு வருகிறது.
எதிர்வரும் காலங்களில் புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலங்கானா அரசு கைவிடும் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!