
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் ஓஜி
நான்கு நாட்களில் உலக அளவில் மொத்தமாக 252 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் புரிந்துள்ளது.
இப்படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி என்று சொல்லப்படுகிறது. தியேட்டர் வியாபாரத்துடன் மொத்த வசூலை ஒப்பிடுகையில் 80 சதவீதம் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். இன்னும் 20 சதவீதம் வசூலித்தால் படம் "பிரேக் ஈவன்" பெற்றுவிடும். இந்த வாரம் பெரிய போட்டிகள் இல்லாததால் அது நடந்துவிடும் என்றே தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!