
விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா
சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய விதார்த், "அம்மாவாக நடிக்க பல ஹீரோயின்கள் தயங்குவார்கள். ரக்ஷனா தைரியமாக ஒப்புக்கொண்டார். சம்மர் காலத்தில் வேலுார் சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தது. கேரவன் கிடையாது. படக்குழு ரொம்பவே கஷ்டப்பட்டோம்"" என்றார்.
ஹீரோயின் பேசுகையில், ‛‛விதார்த்தை சீனியர் ஹீரோ என்றார்கள். மற்றவர்கள் அதை குறிப்பிட்டு கலாய்க்க, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நடிப்பில் எனக்கு சீனியர். அவருக்கு 30 வயதுதான் இருக்கும்"" என்று சமாளித்தார்.
அக்டோபர் 10ல் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தவிர, சாட்டை அன்பழகன் இயக்கும் படம், 2 வெப்சீரிஸ், இன்னொரு படத்திலும் விதார்த் நடிக்கிறாராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!