
கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல்
ஆனால், கரூர் சம்பவத்தால் படத்தின் வெற்றிக்கும், வசூலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க விஜய் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்த வாரம் குஷி படத்தின் வசூல் பாதிக்கும் என்று படத்தை வெளியிடுபவர்கள் பயப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலை காரணமாக படத்தை விளம்பரப்படுத்தவும் முடியாத நிலை. ஆகவே, கில்லி, சச்சின் அளவுக்கு குஷி ரீ ரிலீசில் வசூலிக்காது என்று கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தால் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்துக்கும் பாதிப்பு வருமா? அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் படம் ரிலீஸ் என்றாலும், இந்த சம்பவத்தில் பாதிப்பை குறைய வாய்ப்பு இருக்குமா என்று அந்த படக்குழு பதறுகிறதாம். ஜனநாயகன் படம் சம்பந்தப்பட்ட யாரும் கரூர் துயரம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!