
கந்தாரா சாப்டர் 1 போட்டியை சமாளிக்குமா இட்லி கடை
"காந்தாரா" படம் 2022ல் வெளியான போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பெரிய வெற்றியைப் பெற்று 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனால், அதன் "முன்பாகப்" படமான "காந்தாரா சாப்டர் 1" படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது. படம் நன்றாக அமைந்துவிட்டால் 1000 கோடி வசூலையும் பெறும் என்று யூகிக்கிறார்கள்.
"காந்தாரா 1" படத்தின் போட்டியை "இட்லி கடை" கடுமையாக சமாளிக்க வேண்டி இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட தியேட்டர்கள் கிடைப்பதும் "இட்லி கடை" படத்திற்கான சிக்கல். தமிழில் ரெட் ஜெயன்ட் வெளியிடுவதால் பிரச்சனை இருக்காது. அந்தப் போட்டியை சமாளித்து "இட்லி கடை" எப்படி வரவேற்பையும், வசூலையும் பெறும் என்பது இப்போதைய கேள்வியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!