
பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா
பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்ததில்லை. என்றாலும் அவர் விஜயகாந்திற்கு ஜோடியாக நடித்த படம் "ஏமாற்றாதே ஏமாறாதே". வி.சி.குகநாதன் இயக்கிய இந்த படத்தில் அனுராதா, விஜயகுமார், சுமித்ரா, சுருளிராஜன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.
கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி அண்ணனோடு சென்னை வரும் தங்கையை வில்லன்கள் கூட்டம் பலாத்காரம் செய்து கொன்று விட நேர்மையான இன்ஸ்பெக்டரான விஜயகாந்த் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதுதான் கதை.
இதில் விஜயகாந்தின் காதலியாக அர்ச்சனா நடித்தார். படத்தில் அவரது அதிகப்படியான மேக்அப் கொண்ட தோற்றமும், நடிப்பும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் பெரிய தோல்வி அடைந்தது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!