
கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி
இந்நிலையில் தமிழக அரசு இவருக்கு ‛கலைமாமணி விருது" அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான நாட்டிய பிரிவில் இவர் இந்த விருதை பெறுகிறார். இதுகுறித்து தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
‛‛மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் படுத்த படுக்கையாக உள்ளேன். உடல் அசைவு இல்லை. கோயில்கள், மேடைக்கச்சேரிகள் என உள்ளுர் முதல் உலக நாடுகள் வரை 365 நாளும் குச்சுப்பிடி நடனம் ஆடியவள் நான். மருத்துவ குளறுபடியால் என் உடல்நிலை இப்படி ஆனது. இதுவரை எனக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கவில்லை. இந்த விருது என்னை திரும்ப எழுந்து உட்கார வைத்த உணர்வை தருகிறது. தமிழக அரசுக்கும், தேர்வுக் குழுவிற்கும் நன்றி"".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!