
இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு சான்றிதழ்
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு என அடுத்தடுத்து பட புரொமோஷன்களில் பங்கேற்றார் தனுஷ். தொடர்ந்து ஒவ்வொரு ஊராக சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அக்டோபர் 1ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் இப்போது தணிக்கை சம்மந்தப்பட்ட பணிகளை நிறைவு செய்துள்ளனர். இந்த படத்தில் எந்தவொரு ஆக்ரோஷமான, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெறாததால் தணிக்கை குழு "யு" சான்றிதழ் அளித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!