
காந்தாரா சாப்டர் -1 படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு தமிழில் டப்பிங் கொடுத்த நடிகர் மணிகண்டன்!
கடந்த 2022ம் ஆண்டில் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் "காந்தாரா". இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது அதன் முன்பகுதி கதையாக "காந்தாரா சாப்டர்-1" என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அவருடன் ருக்மணி வசந்த், ஜெயராம், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிரைலர் காந்தாரா டிரைலரை போன்று பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த படத்தில் நாயகன் ரிஷப் ஷெட்டிக்கு நடிகர் மணிகண்டன் தமிழில் டப்பிங் கொடுத்திருக்கிறார். இவர் "குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்" போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!