
மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1 டிரைலர்
இந்நிலையில் இதன் டிரைலரை பான் இந்திய அளவில் வெளியிட்டுள்ளனர். தமிழ் டிரைலரை சிவகார்த்திகேயன், தெலுங்கு டிரைலரை பிரபாஸ், ஹிந்தி டிரைலரை ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் வெளியிட்டனர். டிரைலர் பார்க்கவே பிரமாண்டமாய், மிரட்டலாய் உள்ளது. காந்தாரா படத்தின் முந்தைய பாக கதை என்பதால் சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது.
வன நிலத்தில் உள்ள பூர்வ குடி மக்களுக்கும், மன்னனுக்குமான மோதல் தான் கதை என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. குறிப்பாக குலிகா தெய்வத்தின் பின்னணி, அதுதொடர்பான காட்சிகள், சரித்திர பின்னணியில் நகரும் காட்சி அமைப்புகள், போர்கள் என டிரைலரை பார்க்கும்போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அக்., 2ல் படம் உலகம் முழுக்க வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!