
தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன்
அவர் கடைசியாக நடித்த குபேரா படம் தெலுங்கில் ஹிட். ஆனால், தமிழில் ஓடவில்லை. இங்கே சரியான பப்ளிசிட்டி இல்லை. நீங்க அதை செய்து இருந்தால் மக்களிடம் படம் போய் சேர்ந்து இருக்கும், கூடுதல் டிக்கெட் விற்று இருக்கும் என்று சிலர் சொல்ல, இட்லி கடையில் அந்த தவறு நடக்க கூடாது என்று ஊர், ஊராக சென்று படத்தை விளம்பரப்படுத்த உள்ளார்.
ரசிகர்கள் அன்பை பெற, சில வாரங்களாக அவர்களை சந்தித்து விருந்து அளித்து போட்டோ எடுத்து வருகிறார். தனுஷை விட, சிவகார்த்திகேயன் மார்க்கெட், சம்பளம் அதிகரித்து வருகிறது. விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி 100கோடி வசூலை தாண்டியுள்ளது. அது அவருக்கு பிரஷர் ஆக மாற, தனது வெற்றியை உறுதிப்படுத்த இட்லி கடை மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார். இந்த படம் 200, 300 கோடி அளவுக்கு வசூலை அள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!