
மீண்டும் ஓடிடியில் குட் பேட் அக்லி : இளையராஜா பாடல்கள் மாற்றம்
இப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த, “""ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, எஞ் ஜோடி மஞ்சக் குருவி"" ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தது. படத்தின் வரவேற்புக்கு பொருத்தமான இடங்களில் வந்த அந்தப் பாடல்களும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அந்தப் பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அப்பாடல்களை உடனே நீக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ஓடிடி தளங்களில் அந்தப் பாடல்கள் அப்படியே இருந்தன.
அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என இளையராஜா தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து "குட் பேட் அக்லி" படத்தை ஓடிடியிலிருந்து நீக்கினர். சில நாள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அந்தப் பாடல்கள் இல்லாமல் மீண்டும் ஓடிடியில் படத்தை இணைத்துள்ளனர். அந்தப் பாடல்களுக்குப் பதிலாக வேறு இசையை சேர்த்துள்ளனர். ஆனால், அவை பொருத்தமாக இல்லை.
மேலும், நீதிமன்றத்திலும் மைத்ரி நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!