
டிரெயின் படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு!
வி கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் "டிரெயின்". இதில் ஜெய்ராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ரிலீஸூக்கு தயாராகி ஒரு வருடம் ஆகிறது. ஆனாலும், இந்த படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரங்கள் தேங்கி நிற்பதால் இப்படம் ரிலீஸூக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதற்கிடையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான "தலைவன் தலைவி" படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளதால் தயாரிப்பாளர் தாணு இப்போது டிஜிட்டல், சாட்டிலைட் சம்மந்தப்பட்ட நிறுவனங்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த படத்தை முடிந்த அளவிற்கு இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!