
ரோபோ சங்கர் உடலுக்கு கமல் அஞ்சலி
கமலின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர். இந்நிலையில் ரோபோ சங்கர் மறைவுக்கு நேற்று முதல் ஆளாய் இரங்கல் தெரிவித்த கமல் இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். கமல் வந்ததை பார்த்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அப்பா யார் வந்து இருக்கானு பாருப்பா.... என்று கதறிய காட்சிகள் அங்கு இருந்தவர்களை மட்டுமல்ல, அந்த வீடியோவை பார்த்தவர்களையும் கண்கலங்கச் செய்தது.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் கமல் பிறந்தநாளை தொடர் கொண்டாட்டமாக நடத்த இருந்தார். அதுவும் அவரின் நிறைவேறாத ஆசையாகிவிட்டது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!