
ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.?
இந்நிலையில் அவரது மறைவு குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ரோபோ சங்கர் செப்., 16ம் தேதியன்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப்போக்கு அதிகம் இருந்தது. மேலும் உள் உறுப்புகளும் செயல் இழந்து, வயிற்றுப் பகுதியிலும் தீவிரமான பிரச்னைகள் இருந்தன. அந்தச்சூழலில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எங்கள் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்காமல் செப்., 18 அன்று இரவு 9:05 மணிக்கு உயிரிழந்தார்"".
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!