
100 கோடி வசூல் கடந்த மிராய்
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அடுத்தடுத்து இரண்டு 100 கோடி வசூல் படங்களைத் தந்துள்ளார் படத்தின் நாயகன் தேஜா. இதற்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த "ஹனுமன்" படம் 300 கோடி வசூலைப் பெற்றிருந்தது.
"மிராய்" படம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அங்கு 2 மில்லியன் யுஎஸ் டாலருக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தது படத்திற்கு பெரும் ஆதரவாய் அமைந்தது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!