
கூலி பைனல் வசூல் அறிவிக்கப்படுமா ?, ரசிகர்கள் எதிர்பார்ப்பு
படம் வெளியான நான்கு நாட்களில் 404 கோடி வசூலித்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதன்பிறகு வசூல் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் வெளியடவில்லை. கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரு சில தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் நாளையுடன் தியேட்டர் ஓட்டத்தை முடிவு செய்ய உள்ளது. மற்ற நடிகர்களின் படங்களுடன் வசூல் ரீதியாக சண்டை போட வசதியாக இப்படத்தின் "பைனல்" வசூல் என்ன என்பதை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுமா என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இருந்தாலும் அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இப்படம் 600 கோடி வசூலைக் கடந்ததாகச் சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!