
மிராய் நாயகன், இயக்குனருக்குக் கார் பரிசு
நேற்று இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத், படத்தின் நாயகன் தேஜாவுக்கும், இயக்குனர் கார்த்திக்குக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர்களுக்குப் பிடித்த கார் எதுவாக இருந்தாலும் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். இதை மகிழ்வுடன் இருவரும் ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் சினிமாவிலும் இப்படி கார் பரிசு வழங்குவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், சமீப காலத்தில் இப்படி எதுவும் நடக்கவில்லை. "ஜெயிலர்" படத்தின் வெற்றிக்கு அதன் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த காரைப் பரிசாக வழங்கினார். அதன்பின் வேறு எந்த தயாரிப்பாளரும் இப்படி அளிக்கவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!