
குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
அப்படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பாடல்களான "ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, எஞ் ஜோடி மஞ்சக் குருவி" ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். அப்பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.
ஆனால், ஓடிடி தளங்களில் "குட் பேட் அக்லி" படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல்கள் நீக்கப்படவில்லை. அது குறித்த செய்தியையும் நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இளையராஜாவின் வழக்கறிஞர் உடனடியாக அப்பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!