
முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த மிராய்
இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக 27 கோடியே 20 லட்சம் வசூலாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
தேஜா சஜ்ஜா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "ஹனுமன்" படம் முதல் நாளில் 23 கோடியே 50 லட்சம் வசூலித்திருந்தது. அந்த சாதனையை தற்போது "மிராய்" படம் முறியடித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஹனுமான்" அளவிற்கு இந்தப் படம் 300 கோடி வசூலைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!