
சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி
‛‛சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது, எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்"" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அனுஷ்கா, சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுக்கிறேன் என நேற்று பதிவிட்டிருந்தார். ஆனால், ஐஸ்வர்ய லட்சுமி மொத்தமாக விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
இன்றைய யுகத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் அவர் எவ்வளவு காலம் விலகியிருப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!