
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4
இந்த படத்திற்கு தமிழைப் போலவே தெலுங்கில் இப்போதே வரவேற்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். காரணம் இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா மற்றும் காஞ்சனா-3 படங்கள் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றது. குறிப்பாக, காஞ்சனா 3 தெலுங்கில் வெளியானபோது நானியின் ஜெர்ஸி படத்துக்கு கடுமையான டப் கொடுத்தது. இதன் காரணமாகவே இப்போது காஞ்சனா 4 படத்தின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு அங்குள்ள வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதாம். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால், விரைவில் ரிலீஸ் தேதியை அறிவித்து வியாபாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளாராம் லாரன்ஸ்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!