
நடிகனாக 21 ஆண்டு நிறைவு: அர்ஜூனை மறக்காத விஷால்
இந்த வெற்றி பயணத்தில் என்னுடைய வெற்றியாக இல்லாமல் நமக்கான வெற்றியாக பார்க்கிறேன். இவைகளை எல்லாம் விட பெரிய சக்தியாக நான் கருதுவது என் உயிரான என் ரசிகர்கள். நான் விழுந்தாலும் என்னை எழவைக்கும் எழுச்சி குரல் நீங்கள் தான். என் நம்பிக்கையும் நீங்கள் தான். இந்த இருபத்தொரு ஆண்டுகளில் எத்தனை சோதனைகளும், எத்தனை சவால்களும் வந்தாலும், எனக்கு துணையாக நின்று, என் அருகில் தோள் கொடுக்கும் தோழனாக இருந்தது நீங்கள் தான். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும், நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு கதையும், நான் வாழும் ஒவ்வொரு நொடியும், உங்களுக்காகவே இருக்கும். உங்களை மகிழ்விக்கவே இருக்கும். இந்த பயணம் முடிவடையவில்லை… இது ஒரு தொடக்கமே.
நான் வெறும் நன்றி என்ற வார்த்தைகளால் முடிக்காமல் உங்களால் அடையாளம் காட்டப்பட்ட நான் எனது "தேவி அறக்கட்டளை" மூலம் ஏழை, எளிய பெண் கல்விக்கும் மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வருகிறோம், என்னால் முடிந்த உதவிகளை நானும் என் இயக்கமும் என்றென்றும் செய்வோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன்"" என்று கூறியுள்ளார்.
நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக சினிமா பணியை தொடங்கியவர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!